கோவையில் இன்று 156 இடங்களில் தடுப்பூசி முகாம்!!
கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்போரில், 90 சதவீதத்தினர், இதுவரை கொரோனா தொற்று தடுப்பு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். மேலும் 1.15 லட்சம் பேரே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு, 84 நாட்கள் கடந்ததும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வகையில் இன்னும், 2 லட்சத்து, 94 ஆயிரம் பேர் ஊசி போட ஆர்வமின்றி இருக்கின்றனர்.அவர்களுக்காக வாரம் இரு முறை என, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவையில் இன்று காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, 156 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments