திரிபுராவில் சிறுபான்மை மக்கள் மீதுவன் முறையை தொடுக்கும் பாசிச பஜக கும்பலை கண்டித்த ஆர்ப்பாட்டம்!!
திரிபுரா மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் மீது பாஜக வின் பாசிச சக்திகள் தொடுத்து வரும் வன்முறை தாக்குதலை கண்டித்து கோவை மாவட்ட PFI சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல், மற்றும் சிராஜ்தீன், செபிக், உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப்,கோவை.
Comments