மதுபானம் கலந்த ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் கடை!! உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல்!!

 -MMH

கோவையில் பி.என்.பாளையம், அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ்க்கு சொந்தமான வணிகவளாகத்தில்  Rolling Dough Cafe எனும் ஐஸ் கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில்  மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கடையை ஆய்வு செய்து சீல் வைக்க உத்தவிட்டார்.

அதன் பேரில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன்  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் இன்று திடீர்  ஆய்வு  மேற்கொண்டனர். அதில் ஐஸ்கிரீம்   கடையில் உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டதோடு, காலாவதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

அதேபோல் உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை எனவும், உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டதோடு, முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படாமலும் இருந்துள்ளது. 

உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை என கூறும் அதிகாரிகள் உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறைஅணிந்து பணிபுரியவில்லை என்பதோடு உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படமால் இருந்த்தை சுட்டிக்காட்டியுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பொருட்களை அழித்தனர். இதனைத்தொடர்ந்து  Rolling Dough Cafe  ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்ய உணவு பதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments