கோவையில் வங்கிகள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது!!
வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், விவசாய கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன், முக்கியமாக மத்திய அரசு வழங்கும் முத்ரா கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் வசதிகளை உடனடியாக பெற்று பயனடையும் வகையில் பல்வேறு முன்னணி வங்கிகள் சங்கம்மான கண்காட்சி கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கண்காட்சியை கோவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன், மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்து பேசும் பொழுது, இதுபோன்ற வங்கிகள் அனைத்தும் சங்கமம் ஆகியுள்ள வாய்ப்பை பொதுமக்களும், தொழில் செய்பவர்களும் பயன்படுத்தி, உரிய கடன் தொகையை பெற்று தொழிலை மேம்படுத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல் வங்கியில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தினால் மீண்டும் மீண்டும் பயன்பெறலாம் என்று அறிவுறுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் கனரா வங்கியின் சென்னை வட்டார அலுவலக முதன்மை பொது மேலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments