கிடுக்கிப்பிடி போட்ட வருமான வரித்துறையினர்..!! சிக்கலில் மாஜி அமைச்சர்..!!
கிடுக்கிப்பிடி போட்ட வருமான வரித்துறையினர்..!! சிக்கலில் மாஜி அமைச்சர்..!!
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவர் குட்கா மோசடி புகாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது, இந்த பிரச்சினையின் அடிப்படையில் இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் சரிவர ஆதாரங்கள் சிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அப்பிரச்சினை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது இன்று அதிகாலையில் வருமான வரி துறையினர் மீண்டும் விஜய் பாஸ்கர் வீட்டில் திடீர் சோதனையில் அதிரடியாக களமிறங்கியுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை என்ற மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தற்போது தமிழகம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா, திருப்பூர்.
Comments