மசாஜ் சென்டர் என்ற பெயரில் தொடரும் லீலைகள்!! இளம் பெண்களை மீட்ட காவல்துறையினர்!!

  -MMH

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம், இரண்டு இளம்பெண்கள் மீட்பு, ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை.

கோவை நீலம்பூர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி  வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக சூலூர் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் கண்காணிப்பாளர் மாதையன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர் அப்போது அவர்கள் அந்தக் குறிப்பிட்ட  மசாஜ் சென்டரில்  சோதனை செய்தனர். சோதனையில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. அந்த மசாஜ் சென்டரில் இருந்து  இரண்டு இளம் பெண்களை மீட்ட போலீசார் இந்த மசாஜ் சென்டர் நடத்தி வந்த திலீபன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments