குடி, குடியைக் கெடுத்த கொடூரம்! காதல் மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவெடுத்த பரிதாபம்!!

  -MMH

  கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (வயது21). தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிணத்துக்கடவை சேர்ந்த நளினி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சுந்தராபுரத்தில் உள்ள கிஷோர் வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் தினமும் காலையில் வேலைக்குச் செல்லும் கிஷோர் வீட்டிற்கு திரும்பும்போது குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதனால் நளினி, கணவரிடம் கோபித்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் கிஷோர், செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு நளினியை அழைத்து உள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கிஷோர், நளினியின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதற்கு அவர்கள், உங்களின் பெற்றோருடன் வந்து நனினியை அழைத்துச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

இதனால் மனக்கவலை அடைந்த கிஷோர்,  சுந்தராபுரம் உழவர் சந்தை அருகே உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு ஒரு அறையில் அவருடைய நண்பர் இருந்தார். 

அப்போது மற்றொரு அறைக்கு சென்ற கிஷோர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவைமாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments