கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

 -MMH

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் வண்டிப்பாதை சாலைகளை சீரமைக்க வேண்டும். 

பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்களில் உள்ள பழுதடைந்த அனைத்து மடைகளையும் சீரமைக்க வலியுறுத்தியும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பழைய முறைப்படி 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments