கோவை மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கை! போதை மருந்து கும்பல் அதிரடி கைது!!!

 -MMH

கோவை மாவட்ட போலீசாரின் தொடர் நடவடிக்கையால், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு மாதத்தில், 28 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்து வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், பெரியநாயக்கன்பாளையம், 4, பேரூர், 2, கருமத்தம்பட்டி, 10, பொள்ளாச்சி, 1, வால்பாறை, 3, மேட்டுப்பாளையம், 8 என, மாவட்டத்தில் உள்ள ஆறு சப்-டிவிஷன்களில், 28 பேர் கைது செய்யப்பட்டு, 13.47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில், ''கஞ்சா தடுப்பு நடவடிக்கைக்கான, 'டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்' திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். புகார்தாரரின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண், 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண், 77081 00100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments