காட்டு யானை தாக்கி முதியவர் பலி! அப்பகுதி மக்கள் சோகம்! !

 

  -MMH

  தொண்டாமுத்துார்: காட்டுயானை தாக்கியதில், முதியவர் உயிரிழந்தார்.கோவை தடாகம் பிரிவு, அட்டுக்கல் மலை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, 62. இவர் நேற்று வனப்பகுதியில், சீமார் புல் எடுக்க சென்றார். அப்போது, காட்டு யானை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.வனத்துறையினர் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தொண்டாமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments