தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் போனஸ்! எஸ்டேட் நிர்வாகத்தினர் அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி! !
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர் வுட் பிரையர் நிறுவனம், தேனி மாவட்டத்தில் வுட் பிரையருக்கு சொந்த மான ஹைவேஸ் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் 5 ஆயிரத்து 500 தொழிலாளர்களுக்கு 9.24 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை, கூடலூரில் உள்ள பாரி அக்ரோ நிறுவனத்தில் 5 ஆயிரம் பேருக்கும், வால்பாறை, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை யில் முடீஸ் குரூப் நிறுவனமான பாம்பே பர்மா நிறுவனத்தில் 3,500 தொழிலாளர்களுக்கும் 8.50 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரியகருமலை எஸ்டேட்டில் பணியாற்றும் 2 ஆயிரம் தொழிலாளர் களுக்கு 9 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மளுக்கப்பாறை டாடா எஸ்டேட்டில் பணியாற்றும் 4,200 பேருக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடி அளவுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.
போனஸ் தொகை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் இன்று (வியாழக்கிழமை) முதல் செலுத்தப்படுகிறது என்று வுட் பிரையர் துணைத் தலைவர் பாலச்சந்தர், குரூப் மேலாளர் ரஞ்சித், பாரி அக்ரோ துணைத் தலைவர் மகேஷ் நாயர், தமிழ்நாடு ஆனைமலை தோட்ட அதிபர் சங்க தலைவர் திம்பையா, டாடா குரூப் மேலாளர் அச்சையா, சட்ட ஆலோசகர் பிரகாஷ் சங்கர், கருமலை எஸ்டேட் துணைத் தலைவர் எஸ்.வி.சிங், மேலாளர் கிருஷ்ண குமார் ஆகியோர் அறிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.
Comments