சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் உட்பட இருவர் கைது!!
கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் உட்பட இருவரை போலிசார் கைது செய்தனர்.
கடந்த 21-10-21 அன்று கோவை குணியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் செல்வம் மளிகைகடையில் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து கோவை கோவை குணியமுத்தூர் போலிசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவை கரும்புக்கடையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்ததில் செயின்பறிப்பு சம்பவத்தின் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தது தெரியவந்தது.
மேலும் அவனிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டதில் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பைசல் ரஹ்மான் என்ற வட பைசல் எனவரை போலிசார் கைது செய்தனர். மேலும் போலிசார் நடத்திய விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் அணி துணை தலைவர் ரஹ்மான் கோவை குணியமுத்தூர், அபர்னா, பி.கே.புதூர், இடையர்பாளையம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவருகிறது. குணியமுத்தூர் போலிசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணைதலைவராக இருக்கும் பைசல் ரஹ்மான் என்பவர் ஒரு சங்கிலிபறிப்பு கொள்ளையன் என்பது கோவை மக்களை கதிகலங்க செய்துள்ளது. மேலும் பைசல்ரஹ்மான் காங்கிஸ் கட்சியின் மாநில தலைவர் இளங்கோவன் மற்றும் திமுக மாநகர பொருப்பாளர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைபடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சீனி,போத்தனூர்.
Comments