ஹோட்டலில் வாங்கிய கோழிக்குழம்பை சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் இளங்கோவன். அவரது மனைவி கற்பகம் (34), மகள் தர்ஷினி (7). நேற்று இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். அப்போது லேசான வயிறு எரிச்சல் ஏற்படவே, அருகில் இருந்த கடையில் 10 ரூபாய் விலையில் உள்ள குளிர்பானத்தினை வாங்கிக் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களது உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் தாய் - மகள் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தாயும் மகளும் சாப்பிட்ட சிக்கன் கிரேவி உணவையும், குடித்த குளிர்பான பாட்டிலையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
-பாரூக்.
Comments