கோவை ராம்நகரில் அதிக வசதிகளுடன் கூடிய கிராண்ட் வேர்ல்ட் எல்டர் கேர் முதியோர் பராமரிப்பு சேவை மையம்!!

  -MMH

   கோவை ராம்நகரில் அதிக வசதிகளுடன் கூடிய  கிராண்ட் வேர்ல்ட் எல்டர் கேர் முதியோர் பராமரிப்பு சேவை மையம் துவங்கப்பட்டது.

முதியோர்கள் பராமிரிப்பு சேவையில் பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள  கிராண்ட் வேர்ல்ட் எல்டர் கேர்  முதியோர் பராமரிப்பு நிறுவனம்,  60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில்,இந்நிறுவனத்தின் புதிய முதியோர் பராமரிப்பு கிளினிக் துவக்க விழா கோவை ராம் நகரில் நடைபெற்றது.நிறுவனத்தின் தலைவர் விட்டல் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக மருத்துவர் ராஜ சபாபதி கலந்து கொண்டு புதிய மையத்தை துவக்கி வைத்து பேசினார்.புதிய சேவை மையம் குறித்து, நிறுவனத்தின் செயல் இயக்குனர் விஷ்ணு விட்டல் கூறுகையில்,முதியோர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியலாளர் , செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்த  பராமரிப்பை இங்குள்ள முதியோர்கள் பயன் பெறலாம், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எப்படி குழந்தைகள் நல மருத்துவர் இருக்கிறாரோ அதேபோல் முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் அவர்களை பராமரிக்கும் வகையில்,  முதியவர்களின் தேவைக்கேற்றவாறு, சிகிச்சை அளிப்பதோடு ஒரு முழுமையான அணுகு முறையுடன் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் சிறந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்,  இங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.விழாவில் மருத்துவர் ஃப்ளோரா அலெக்ஸ்,வழக்கறிஞர் நாக சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments