கிலி ஏற்படுத்திய முதுமலை புலி!! செய்தியாளர்கள் திடீர் மறியல்!! பரபரப்பு படங்கள், வீடியோக்கள்!!

    -MMH

நீலகிரி முதுமலை வனச்சரகத்தில் மக்களை குலை நடுங்க வைத்த T23 புலி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் துணிச்சலாக பிடித்துள்ளனர்.

இந்நிலையில்,  வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் சம்பவ இடத்தில்  நேரில் பார்வையிட்டார். அப்போது, வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நிருபரை மட்டும் அழைத்துக்கொண்டு புலியை பார்வையிட சென்றதாகவும், நீதிபதி ஒருவரும் குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பரபரப்பு நிலவியது.

கடந்த 20 நாட்களாக அங்கு பசியிலும் குளிரிலும் முகாமிட்டு இருந்த மற்ற பத்திரிகையாளர்களை வனத்துறை அதிகாரிகள், உள்ளே விட மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பிட்ட நிருபரை  மட்டும் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளதாலும் உயர்நீதிமன்ற நீதிபதியின் குடும்பத்தினரை மட்டும் சிறப்பு அனுமதியுடன்

புலி யை பார்க்க அழைத்துச் சென்றுள்ளதாகவும் வேகமாக பரவிய தகவல் காரணமாக மற்ற பத்திரிக்கையாளர்கள் ஆவேசமடைந்து, 

தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முதுமலை மக்களை பீதியில் ஆழ்த்திய புலி பிடிபட்ட நிலையில், புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

-ஊடகவியலாளன், பத்திரிகையாளன்,

ஆர்.கே.பூபதி.

Comments