மாற்றுக் கட்சியினருக்கு விஜய் வசந்த் எம்.பி வரவேற்பு...!!

  -MMH

   நாகர்கோவிலில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி இலக்கிய அணி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னிலையில் மாற்று கட்சியினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதையடுத்து புதிதாக இணைந்த அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார், விஜய்வசந்த் எம்.பி.!

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் சினிவாசன், மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து, ஊட்டுவாழ்மடம் முருகன், இலக்கிய அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இலக்கிய அணி தலைவர் இளங்கோ, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நவீன்குமார், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments