சரவணம்பட்டியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஜலபுல ஜங் சில்மிஷங்கள்...!!!

 

  -MMH

    கோவை சரவணம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்  4 பெண்கள் மீட்பு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்.

சரவணம்பட்டி பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடந்து வருவதாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு நேற்று மதியம் ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து நேற்று மதியம் சரவணம்பட்டி காவல் நிலைய காவலர்கள் சாதாரண உடையில் அந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர் போல் சென்றுள்ளனர். அப்போது அங்கே விபச்சாரம் நடப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த மசாஜ் சென்டர் நடத்தி வந்த உரிமையாளர் அருள்தாஸ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த ராஜா,  சுரேஷ் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

மசாஜ் சென்டரில் இருந்த கோவையை சேர்ந்த நான்கு பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜா மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். சரவணம்பட்டி பகுதியை சுற்றி கல்லூரிகளும், I.T நிறுவனங்கள் அதிகம் உள்ள நிலையில் வாலிபர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து இதுபோல் சம்பவங்கள் நடக்கின்றன என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments