திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படும் என்ற செய்தியால் திரைப்பட உரிமையாளர்கள் மகிழ்ச்சி..!!
கொரோனா இது ஒரு பயங்கரம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தி தற்போது வரை நம்மை விட்டு முழுமையாக அகலாமல் சற்று தூரத்திலேயே நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். இந்த காலகட்டத்தில் பல தொழில் துறைகள் முடங்கி இதுபோல் திரைத்துறையில் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளானது என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையிலும் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு O. T. T தளங்கள் மூலம் வெளியாகி வந்தன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் நடுவே ஒரு முரண்பாடு இருந்துகொண்டே வந்தது. தற்போது கொரோனா வின் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில் தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற செய்தி திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது வெளியாகி உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று மக்கள் குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் திரையரங்கு உரிமையாளர் எங்களுக்கும் மகிழ்ச்சி மக்களுக்கும் மகிழ்ச்சி என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-பாஷா, திருப்பூர்.
Comments