தொடர் மழை எதிரொலி நிரம்பி வழியும் சோலையாறு அணை! மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ள உஷார் நிலையில் நெடுஞ்சாலை துறையினர்! !

 

  -MMH

  வால்பாறை பகுதியில் நேற்று 4-வது நாளாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சோலையாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 161 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 1592 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

வால்பாறை பகுதியில் நேற்று அதிகபட்சமாக சோலையாறு அணை பகுதியில் 115 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும்  சோலையாறு அணை இடது கரை பகுதிக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

சோலையாறு அணை பகுதியில் அதிகளவிலான மழை பெய்ததை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஷ்வரி வால்பாறையில் இருந்து  சோலையாறு அணை வரை செல்லும் சாலைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், எந்த நேரத்தில் எந்த இடத்தில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments