பண்டிகை காலம் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடும் கும்பல் அதிகரிப்பு! பொதுமக்களே உஷார் !!

 -MMH

கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஓடும் பஸ்சில் பணம் திருடிய இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.நவ., 4ல் தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொருட்கள் வாங்க, கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், கூட்ட நெரிசல் அதிகளவில் உள்ளது. இதை பயன்படுத்தி, சிலர் திருட்டு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

வெள்ளலுார், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் கற்பகம்,23, நேற்று முன்தினம் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ஒப்பணக்கார வீதி அருகே பஸ் வந்தபோது, அவரது பையில் இருந்த, 18 ஆயிரம் ரூபாயை ஒரு பெண் திருடினார். சக பயணிகள் உதவியுடன், அப்பெண்ணை பிடித்து, கடை வீதி போலீசாரிடம் ஒப்படைத்தார்.அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பார்வதி,33 என தெரியவந்தது. 

அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மீட்கப்பட்டது. அவரை, போலீசார் சிறையில் அடைத்னர்.இதேபோல், ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்த கலைவாணி,38, நேற்று முன்தினம் காந்தி பார்க்- பால் கம்பெனி ரோட்டில் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அவரது பையில் இருந்த, 450 ரூபாயை ஒரு பெண் திருடினார். அவரை பிடித்த கலைவாணி, ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், மதுக்கரை அருகே நாச்சிபாளையத்தை சேர்ந்த முத்தம்மா, 24 எனத் தெரிந்தது. இவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments