கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வைரஸ் காய்ச்சல்! பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுகோள்! !

 

  -MMH

  கோவையில் இந்த மாதம் தொடங்கி பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 25 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

"கோவையில் பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் இடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் 3 அல்லது 5 பேர் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே மழைக்காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் குடிக்க வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்."இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments