சமூகப்பணி..!! மக்கள் நலன்..!! தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'இவர்'..!!!!

 

  -MMH

  ஏ எஸ் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் இவர் பேரை சொன்னாலே தெரியாத ஆள் ஆளில்லை என்ற அளவுக்கு தன்னை சமூகப்பணியில் அடையாள படுத்திக் கொண்டவர். இவர் எந்த ஒரு  பிரச்சினையை கையில் எடுத்தாலும் அதற்கு நல்லதொரு தீர்வு காணாமல் இதுவரை இருந்ததில்லை.

"நடராஜ் அண்ணன் கிட்ட சொல்லியாச்சு பா இந்தப் பிரச்சினை அவர் முடிச்சிடுவார் " என்று  மக்கள் நம்பிக்கையுடன் சொல்லுமளவுக்கு சிறந்தது இவர் பணி. தண்ணீர் பந்தல், வாட்டர் டேங்க் மற்றும் இதழ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் குழாய் பிரச்சனை, சுகாதார பிரச்சினைகள், சாக்கடை அடைப்பு போன்ற பொதுப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தானே களத்தில் இறங்கி விடுவார். இவர் தலையசைத்தாள் இவரின் ஆணையை நிறைவேற்ற இவருக்குப் பின்னால் எங்கள் அண்ணன் என்று சொல்லும் தம்பிகளின் பட்டாலும்,  இது மட்டுமல்ல  இன்னும் எண்ணில் அடங்காத மக்கள் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் இவர் பிற மக்களுக்கு நல்லதொரு உதாரணம். மக்களோடு மக்களாய் இவரைப் பாராட்டுவதில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments