'பகலில்' எரியும் தெருவிளக்கு...! சமூக ஆர்வலர் கொந்தளிப்பு...!!

 

  -MMH

   திருப்பூர் அனுப்பர்பாளையம் சமூக ஆர்வலர் ந. தெய்வராஜ்.

  திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் மட்ட மத்தியானத்தில் எரியும் தெரு மின் விளக்குகள் படங்கள் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தையே காட்டுகிறது.

அனுப்பர்பாளையம் பள்ளி ரோடு, சித்தி விநாயகர் கோவில் என பல வீதிகளில் இரவில் காணாத மின் வெளிச்சம் பகலில் வீணாய் எரிகின்றது. மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துமாறு அரசு அதிகாரிகளின் விழிப்புணர்வு  பிரசுரம் பொதுமக்களிடம் மட்டும் தானா...?

தெரு மின்விளக்குகள் எரிந்தால் மின்சாரம் விரயம் ஆகாதா..?  இதனைச் சார்ந்த மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து மக்கள் பயன்பாட்டின் நிலைக்கு ஏற்ப செலவு செய்தால் நன்மை பயக்குமே என்பது எங்களைப் போன்ற சமூக ஆர்வலரின் கோரிக்கை என திருப்பூர் அனுப்பர்பாளையம் சமூக ஆர்வலர் தெய்வராஜ் தெரிவித்துள்ளார்.

அது சம்பந்தமாக சமூக ஆர்வலர் தெய்வராஜ் எடுத்துள்ள புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

தூங்கும் தமிழக மின்வாரியம் விழிக்குமா?

கண்களில் பட்ட சமூக அவலங்களை தனக்கென்ன என அலட்சியமாக சென்று விடாமல் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் தெய்வராஜ் மறுபக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இவர், அறக்கட்டளையை வைத்து நடத்தி வருவதுடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் அஸ்திவாரம் போட்டுள்ளார். நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளை அலுவலகம் 52- ஜி, காந்தி ரோடு, அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம் ( அஞ்சல்) திருப்பூர் மாவட்டம் 641652 முகவரியில் இயங்கி வருகிறது.

புதியதாய்  ஆதரவற்றோர்க்கான மறுவாழ்வு இல்லக்கட்டிடப் பணி போத்தம்பாளையம் ஊராட்சி, சேவூர் பகுதி, அவினாசி (தாலுக்கா) திருப்பூர் மாவட்டம் என்னும் முகவரியில் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம். அனுப்பர்பாளையம் பகுதியில் கடந்த 21 ஆண்டு காலமாக "நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை" இயங்குகிறது.

கடந்த 21 ஆண்டுகளில் சாலையோரம் மனநிலை பாதித்தோர், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர் என 35 ஆயிரம் பேர் மறுவாழ்வு அடைந்து நேரடியாக பயன்பெற்றுள்ளனர்.

ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்ல கட்டிடப் பணி 2020  ம்  ஆண்டு தொடங்கியது. மறுவாழ்வு  இல்லக்  கட்டிடப்பணிக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளைக்கு கொடையாளர்கள் தங்களால் இயன்ற கட்டிட கட்டுமான பொருட்கள், நிதியுதவியை வழங்கலாம் என நிர்வாக இயக்குநர் தெய்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதரவற்றோர்களின் "பாதுகாவலர்" சமூக ஆர்வலர் அனுப்பர்பாளையம் தெய்வராஜ்.

இவரை போலவே அனைத்து சமூக ஆர்வலர்களும் நிஜமான அக்கறையுடன் செயல்பட்டால் அவலங்களை துடைத்து எறிந்து விடலாம் என்பதே உண்மை..!!

-பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-கோவை ஆர்.கே.பூபதி.

Comments