பெண்ணாய் பிறந்தது தப்பா...?!! கண்ணீர் சிந்தும் தாய்க்குலங்கள்!! தொடரும் பாலியல் வன்முறைகள்..!!
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் ஜவுளிக்கடையில் வேலைபார்த்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நபர் மீது போலீசார் வழக்கு.
கோவை சிங்காநல்லூர் அம்பாள் தியேட்டர் அருகில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பவர் தான் 22 வயதான ஒரு இளம்பெண். அதே கடையில் கேஷியர் ஆக வேலை பார்த்து வரும் ஒரு நபர் நேற்று மாலை கடையில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை எதிர்த்து அந்த நபருடன் போராடிய அந்த இளம்பெண்ணுக்கு உடம்பில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம் பெண்ணின் தந்தை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
'' பெண்கள் நம் நாட்டின் கண்கள்", ' ஆணுக்குப் பெண் நிகர் ', பெண் சுதந்திரம் என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளும் இந்த தமிழகத்தில் தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்மைப் பெற்றெடுத்த தாயும் ஒரு பெண், நம் உடன் பிறந்த சகோதரி ஒரு பெண்தானே என்று காமத்தை தாண்டி கருணையுடன் பார்த்தால்தான் நம் நாட்டின் பெண் சமுதாயம் பெருமையுடன் போற்றப்படும். அதுமட்டுமின்றி பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் அந்தப் பெண் வெளியே சென்று வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி தான் இருக்க வேண்டி உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments