பொதுமக்களின் நலனுக்காக தன்னுடைய செலவில் சாலை அமைக்கும் நலம் விரும்பி ; பொதுமக்கள் மகிழ்ச்சி! !

  -MMH

  கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள கக்கன் காலனி பகுதியில் கால்பந்தாட்ட மைதானத்துக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து மோசமாக உள்ளது.

இந்த சாலை வழியாக செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மக்களின் நலன் கருதி வால்பாறை பகுதியைச் சேர்ந்த மேத்யூ என்ற நபர் தன்னுடைய சொந்த செலவில் கற்களைப் பதித்து கான்கிரீட் போட்டு சாலையை சீர் செய்து வருகிறார்.

இதை அறிந்த அங்கு வசிக்கும் மைதானத்தை சுற்றி உள்ள மக்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-செந்தில்குமார், முடீஸ்.

Comments