சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிப்பு !!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வால்பாறை டவுன் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் வால்பாறை டவுன் பகுதியில் மாடுகள் சர்வசாதாரணமாக அங்குமிங்கும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன இதனால் நடந்து செல்வோரும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே நகராட்சி ஆணையாளர் தலையிட்டு கால்நடை வளர்ப்பு நபர்களை அழைத்து கால்நடைகளை சாலைகளில் விட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என்பதே  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-செந்தில்குமார் (முடீஸ்) .

Comments