மழை காலம்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!!
நேற்று இரவில் இருந்தே கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இப்போதும் சற்று மேக மூட்டத்துடன் மழைத்தூறல்களும் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவிநாசி ரோட்டில் மிகுந்த வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் மேலும் மழை நேரம் என்பதினாலும் சாலைகள் மிகவும் வழுக்கல் ஆகவும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய வண்ணம் உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும் மேலும் வேகத்தை குறைத்து நிதானமாக செல்வதே விபத்துக்களை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
சற்று முன் கூட ஒரு டூவீலர் வேகத்துடன் வர திடீரென்று பிரேக் போட்ட காரணத்தினால் அவருக்கு பின் வந்த ஆட்டோ நிலைதடுமாறிய காரணத்தினால் காருடன் மோதி சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆகவே வாகன ஓட்டிகள் இந்த ஆபத்துக்களை உணர்ந்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று மக்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா, திருப்பூர்.
Comments