போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மேய்ந்து திரியும் ஆடுகள்!! விபத்துக்கள் ஏற்படும் அபாயம்!!
கோவை மாவட்டம் போத்தனூர் கோண வாய்க்கால் பாளையம் மகாலிங்கபுரம் சாலையில் மேய்ந்து திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி. மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
கோணவாய்க்கால் பாளையம் மகாலிங்கபுரம் சாலையில் மேய்ந்து திரியும் ஆடுகளின்நாள் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரின் வாகனங்கள் ஆடுகளின் இடையூறினால் சாலையைக் கடக்க மிகவும் சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
திடீரென்று சாலையில் குறுக்கே வரும் ஆடுகளின்நாள் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவ் வழியவரும் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனே அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிமையாளரை அழைத்து அறிவுரை வழங்கி சமூக நலனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் மக்களும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈஷா & முகமது சாதிக் அலி.
Comments