களத்தில் இறங்கிய காவல்துறை மனிதாபிமான செயலுக்கு மக்கள் பாராட்டு!!
கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு முத்தையா நகர் சாலையில், ஒரு அடி. ஆழம் கொண்ட குழி விபத்தை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நாட்களாக இருந்தது மழையின் காரணமாக அந்த குழி விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால். உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், அந்த வழியில் சென்ற காவல்துறை வாகனம் அதை கண்டதும் நான்கு காவலர்கள் உடனடியாக களத்தில் இறங்கி விபத்தை தடுக்கும் விதமாக மனிதாபிமானத்தோடு உடனடியாக அந்தக் குழியை சிறப்பாக மூடினார்கள்.
இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை உங்கள் நண்பன் மட்டுமல்ல, விபத்தை தடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட இந்த காவல் துறையினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
தமிழக தலைமை நிருபர்,
-ஈசா.
Comments