ஆனைமலையாறு திட்டம் விரைந்து முடிக்கப்படும்!! அமைச்சர் சாமிநாதன்..!!

 -MMH

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க தமிழ்நாடு - கேரள, இரு மாநில தொழில்நுட்பக் குழு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு கேரள மாநில அதிகாரிகள் தலைமையில் தொழில் நுட்பக் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உறுதி அளித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments