ஆயுத பூஜையையொட்டி பழங்கள் மற்றும் பூக்கள் விலை உயர்வு!!
ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள்.ஆயுத பூஜையின் போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள். இதனால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் அதிக அளவில் மக்கள் வாங்குவார்கள். இதன் காரணமாக பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்தது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் மக்கள் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை போன்ற விழாக்களை மக்கள் பெருமளவில் தவிர்த்தனர் இதனால் பூக்கள் மற்றும் பழ வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த வருடம் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தினால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் வாங்க பூ மார்க்கெட், கடைவீதிகளில் நேற்று பொது மக்கள் கூட்டம் அலைமோதியது மற்றும் பூக்கள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments