சிங்கம்புணரியில் எருது கட்டும் விழா!

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள வீரையா கோவிலில் ஆண்டுதோறும் மழைவேண்டி எருது கட்டும் விழா நடத்தப்படும். அந்த எருதுகட்டும் விழாவின் போது, ஒரு காளையின் முன்னங்கால்களில்  4 ஐம்பொன் சலங்கைகள் கட்டப்பட்டு காளை அவிழ்க்கப்படும்.

ஓடும் காளையின் கால்களிலிருந்து விழும் சலங்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்த ஆண்டு விவசாயம் கணிக்கப்படும். ஒரு சலங்கை விழுந்தால் ஒரு போகம், 2 சலங்கை விழுந்தால் 2 போகம், 3 சலங்கை விழுந்தால் 3 போகம் விளையுமென்றும், 4 சலங்கைகளும் விழுந்தால் அந்த ஆண்டு நல்ல அளவில் மழை பெய்து, விவசாயம் முழு அளவில் செழிக்கும் என்பது ஐதீகம்.

(மக்கள் விழிப்புணர்வு அமைப்பில் இணைந்து விடுவீர்... உங்கள் உரிமைகளை காத்திட... சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வை இலவசமாக தெரிந்து கொள்ள.... லஞ்சத்தை தவிர்த்து.... ஊழலை ஒழித்துவிட.... இணைவீர் அமைப்பில்... தொடர்புக்கு: 7010082602 9944111882)

இந்தாண்டு எருதுகட்டு விழா நேற்று இரவு நடத்தப்பட்டது. வெள்ளைக்காளை, வீரையா கோவிலில் கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காளையின் வடத்தை அவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து, ஓடிய காளையின் கால்களில் இருந்து 4 சலங்கைகள் விழுந்தன. 4 சலங்கைகள் விழுந்தால் நல்ல விளைச்சல் தருவதற்கான தெய்வக்கட்டளை என ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, எதிர்வரும் நாட்களில் நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என இப்பகுதி விவசாயிகள் புத்துணர்ச்சியுடன் விவசாயப் பணிகளை துவங்க உள்ளனர்.

-அப்துல்சலாம்.

Comments