மளிகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை! காவல்துறையினர் தீவிர விசாரணை! !
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 40). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.42 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.
Comments