லோக் அதலாத் விசாரணை!!
கோவையில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்கில் காணொளி வாயிலாக லோக் அதாலத் விசாரணை நடைபெற உள்ளது.
2015ஆம் ஆண்டு வரையிலான வழக்குகளை காணொளி வாயிலாக லோக் அதாலத் விசாரணை நடத்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நவம்பர் 25 மற்றும் 30 ஆம் தேதி காணொளி வாயிலாக லோக் அதாலத் விசாரணை நடைபெறுகிறது.
நவம்பர் 19 க்குள் மனுதாரர்கள் மற்றும் இரு தரப்பு வக்கீல்கள் மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-அருண்குமார்,கிணத்துக்கடவு.
Comments