திருப்பதி ஏழுமலையானை தரிசக்க இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்!!
திருப்பதி ஏழுமலையானை தரிசக்க நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியான சில மணி நேரங்களில் விற்று தீர்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இம்மாதம் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியானது. நவம்பர் மாதம், டிசம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஒன்பது மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது.
கடந்த மாதமும் இதே போன்று சில மணி நேரங்களில் தரிசனத்திற்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்த சூழ்நிலையில் இந்த முறையும் அதே போன்ற
சூழ்நிலையில் தரிசன அனுமதி கிடைக்காமல் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச டோக்கன் இன்று 23.10.2021 ஆன்லைனில் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் டோக்கன் என்ற முறையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இலவச தரிசன டிக்கெட்களும் விரைவில் புக்கிங் முடிந்து விடும் என்பதால் பக்தர்கள் விரைவாக அதனை முன்பதிவு செய்து கொள்ள கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமலை ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசனம், கடந்த மாதம் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான டோக்கன்கள், திருப்பதி பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாசா வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது.
நாள்தோறும் கொடுக்கப்படும் 8,000 டோக்கன்களுக்காக, அங்கு 30,000 பக்தர்கள் குவிந்து வந்தனர். இதனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் சூழல் உருவானதால், கடந்த மாதம் 25ம் தேதி முதல், இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஆன்லைனிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இடையூறுகள் இல்லாத வகையில் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக தொழில்நுட்ப வசதியை வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments