எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..!! ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து திருடும் பேட்டரி திருடர்கள்..!!!
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் உள்ளது. இந்த மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 20000 மதிப்புள்ள பேட்டரிகளை திருடி சென்றனர்.
இதைப்பற்றிய புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் 16,000 ரூபாய் மதிப்பிலான பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து ஏடிஎம் மெஷின்களை உடைத்து பணம் திருடுவதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒரு கும்பல் ஏடிஎம் மையங்களை குறிவைத்து பேட்டரிகளை திருடி வருகிறது. ஆக மொத்தத்தில் திருடர்கள் எல்லாம் அறிவாளியாக மாறி விட்டார்கள் போல.
நாளை வரலாறு செய்திக்காக,
-முகம்மது சாதிக் அலி.
Comments