திருப்பத்துர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்!! காவல்துறை விசாரணை!!

     -MMH

நேற்று மாலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் அருகே திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டாம்பூரில் காயாங்கண்மாய் கழங்கு அருகில் அடையாளம் தெரியாத சுமார் 55 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க ஆணின் சடலம் கால்வாய் பகுதியில் இருந்த தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது. 

அவ்வழியாகச் சென்றவர்கள் காட்டாம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்த பின்பு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

இறந்தது யார்? மது போதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கால்வாய் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- ராயல் ஹமீது, அப்துல் சலாம்.

Comments