மழைப் பொழிவு காரணமாக நிரம்பிக் கொண்டிருக்கும் ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!! விவசாயிகள் மகிழ்ச்சி!!

      -MMH

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. 

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அப்பர் ஆழியாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தடுப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இதற்கிடையில் சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில் கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 
பல்லடம் ரோடு, கள்ளிப்பாளையம் பிரிவு, மீன்கரை ரோடு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments