சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டி நடுநிலைப்பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை!

  -MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காப்பாரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு  தடுநிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் தீ தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.

எதிர்வரும் விழாக் காலத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிப்பது, தீப்பிடித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் பேரிடர் காலத்தில் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்றவை குறித்து ஒத்திகை நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் நீர் நிலைகளில் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின்போது, தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் ஒத்திகை நடத்திக்காட்டினர். நிகழ்வில் காப்பாரப்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அற்புதராஜ் மற்றும் ஆசிரியர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும், தீயணைப்பு துறையின் சார்பில் சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

- அப்துல்சலாம்.

Comments