ரயில்வே பாலம் கடக்கும்போது ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!! காட்பாடி அருகே சோகம்!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு கஜராஜ் முதலிய தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜி மாசிலாமணி வயது 55. இவர் பள்ளிக்குப்பம் அருகே ரயில்வே பாலம் கடக்கும்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி உயிர் இழந்தார். உடனே காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், தனிப்பிரிவு போலீசார் கிருஷ்ணகுமார், தலைமை காவலர் சரளா ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ரமேஷ், வேலூர்.
Comments