மக்கள் சேவையில் மற்றும் ஒரு மைல்கல்..!! திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை அசத்தல் திட்டம்..!!

 

  -MMH

  கோவை மாவட்டம் பீளமேடு  பகுதியில் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் மொபைல் வாகனங்கள் இயக்கம் அமைச்சர் சுப்பிரமணியம் துவக்கி  வைப்பு.

கோவை மாவட்டத்தில் இதுவரை 26 லட்சம்  பேருக்கு முதல் தவணை மற்றும் 9,97,000 பேருக்கு இரண்டாவது தவணை கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள்  வீட்டில் முடங்கிக் கிடப்பார் ஆகியவர்களை கண்டறிந்து அவர்கள்  பயன்படும் வகையில் வீடு தேடி சென்று கொரோன தடுப்பூசி செலுத்தும் மொபைல் யூனிட் வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சிக்கு  1 முதல் 5 மொபைல் யூனிட்டுகள்  செயல்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பீளமேடு பகுதியில் மொபைல் யூனிட் வாகனங்கள்  இயக்கத்தை அமைச்சர் மா. சுப்பிராமணியம் அவர்கள்  தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில்  மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருவதால் கொரோனவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும்கோவை மாவட்டத்தில் 87 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 37 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்த பட்டு மாநில அளவில் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளதாக  அவர் கூறினார். ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் மொபைல் யூனிட் வாகன சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இது  திமுக  அரசின் சாதனைகளில்  இன்னொரு மைல்கல்லாக திகழும் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments