கோவை குனியமுத்தூரில் அமைச்சருடன் மஜகவினர் சந்திப்பு! மக்கள் நல கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்!
இன்று கோவை மாவட்டம் வருகை புரிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர்கள் குனியமுத்தூர் பகுதிக்கு வருகை புரிந்தார், அவருடன் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, திமுக பொறுப்பாளர் கார்த்திக், அவர்களும் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் அம் மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.
திருவள்ளுவர் நகர் பகுதியில் தார் சாலை வசதிகள் செய்து தரவேண்டும்.
மேலும் குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உள்ளிட்ட மக்கள் நல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இந்நிகழ்வில் தெற்குப் பகுதி நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments