கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவகல்லூரி வளாகத்தில்,அதி நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பொது மருத்துவமனை சேவை துவக்கம்!!
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவகல்லூரி வளாகத்தில்,அதி நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பொது மருத்துவமனை சேவை துவக்கம்!!
தென்னிந்தியாவின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 2019ஆம் ஆண்டு தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு மருத்துவ கல்லூரியை துவக்கி அதில் தற்போது 300 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள, இந்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதியுடன் புதிய பொது மருத்துவமனை அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில்,மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி புதிய மருத்திவமனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், கேஎம்சிஎச் மருத்துவ கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இந்த மருத்துவமனை வசதி குறைவான ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் என தெரிவித்தார் 30 ஆண்டு கால மருத்துவ சேவை பயணத்தில் இது மற்றுமொரு சாதனையாக அனைத்து தரப்பு மக்களும் தரமான மருத்துவ சேவைகள் கிடைத்த கேஎம்சிஎச் தன்னை அர்ப்பணித்துக் கொள் கிறது என்றும் அவர் தெரிவித்தார். 750 பொது படுக்கை வசதி கொண்ட இப்புதிய பொது மருத்துவமனையில் 50 படுக்கைகள் பல்வேறு தீவிர சிகிச்சை பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளது. 30 படுக்கைகள் அவசரகால விபத்து சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் 11 ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ளன. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகள் அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ அல்ட்ரா சவுண்ட் டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற நவீன வசதிகளுடன் அனைத்து வசதிகள் கூடி ஆபரேஷன் தியேட்டரில் மூலமாக அதி நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கேஎம்சிஎச் மருத்துவ கல்லூரி பொது மருத்துவமனை பொதுமக்கள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும். அவினாசி சாலையில் இருந்து தனிவழி அமைக்கப்பட்டுள்ளது. கேஎம்சிஎச் பிரதான மருத்துவமனையில் இருந்து தனித்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில்,கே.எம்.சி.எச்.துணை தலைவர் தவமணி பழனிசாமி,நிர்வாக இயக்குனர் அருண்,மற்றும் இயக்குனர்கள் மாணிக்கம்,அப்புக்குட்டி,உட்பட மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments