சுற்றுலா பயணிகள் வரும் வாகனத்தால் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்..!!

  -MMH

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து குவிகின்றனர். இதனால் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தி விட்டு செல்வதாலும் பின்பு அரசு பேருந்துகளும் இதர வாகனங்கள் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள்  ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதிலும் அங்கு இறக்கும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் துன்பங்களை கண்டு கொள்வதில்லை

சிறுத்தை,, புலிகள், யானைகள், அதிகளவில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வரும் நிலையில்  இரவு நேரங்களில் மிருகங்களை காண்பதற்கும் சுற்றுலாப்பயணிகள் முயல்வதால்

அங்கு வசிக்கும் மிருகங்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வனத்துறையினர் கூறிவருகிறார்கள்

விலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருக்க சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டுவதை தவிர்க்கவும். மாறும் சுற்றுலா பயணிகள் வாகனம் நிறுத்துவதற்கு கூறிய இடம் ஒதுக்கிஇது இதுபோன்ற

நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார், வால்பாறை. 

Comments