கோவை சாய்பாபா காலனி பகுதியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை !!
தமிழகம் முழுவதும் கைத்தறி மற்றும் துணிநூல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 5 அதிகாரிகள் நேற்று இரவு முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் உதவி இயக்குனர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனி,போத்தனூர்.
Comments