திரிபுரா மாநில அரசைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!!
திரிபுராவில் ஆளும் பாஜக அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்தும் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோயம்புத்தூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தியது
திரிபுராவில் கடந்த சில தினங்களாக சங்பரிவார்க் கும்பலால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துகளை அழத்தும் பாதுகாப்பு கொடுத்து கலவரம் செய்பவர்களை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை கைது செய்யாத திரிபுரா மாநில எதிர்த்தும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய போராட்டத்தை அறிவித்து உள்ளது இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோயம்புத்தூர் மாவட்டம் சார்பாக வள்ளியம்மை பேக்கரி முன்பாக (29 10 2021) நேற்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில்,தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டினன், விசிக மண்டல அமைப்புச் செயலாளர் சுசி கலையரசன் அத்தார் ஜமாத் தலைமை இமாம்இப்ராஹிம் பாகவி இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் லேனா இசாக் மற்றும் பலர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்
எஸ்டிபிஐ கட்சியின் மண்டலத் தலைவர் வி எம் அபுதாகிர், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர்களான அப்துல் ரகுமான், மற்றும் உபைது ரஹ்மான், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள் சமூக ஆர்வலர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சி நகர கிளை நிர்வாகிகள் உட்பட மற்றும் இஸ்லாமிய கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments