கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

 

-MMH 

      கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் இன்று மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த 2 வாரங்களாக மழை பெய்து கொண்டு வருகிறது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, நீலகிரி உள்பட பல மாவட்டங்களில் மழை பிச்சு உதறி வருகிறது.

இந் நிலையில் கோவை, நீலகிரி மாவட்ட மக்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இவ்விரண்டு மாநிலங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்யும் என்றும், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை கொட்டும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் 18ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

-சுரேந்தர்.

Comments