கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி ஆன்லைனில் ஏமாற்றும் மோசடி கும்பல்!! பொதுமக்களே உஷார்!!

 -MMH

கோவை;''கொரோனா தடுப்பூசி போட பெயர் பதிவு செய்வதாக கூறி தகவல்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் மோசடி அதிகரித்து வருகிறது'' என சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் தடுப்பூசி போடுபவர்களுக்கு அரசு சார்பில் பணம் கொடுக்கப்படுகிறது, உங்கள் விபரத்தை பதிவு செய்தால் நிவாரண தொகை வழங்கப்படும். எனவே, உங்களின் வங்கி கணக்கு விபரம் வேண்டும்.

தடுப்பூசி போட்டிருந்தால் அதுதொடர்பான தகவல் இணையதளத்தில் பதியாமல் இருப்பதால் விபரத்தை கொடுங்கள் என ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்கு விபரம் பெறுகின்றனர்.இதுபோன்று தகவல்களை பெற்றுவிட்டு, பொதுமக்களின் மொபைல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பெற்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகின்றனர்.இந்த மோசடி அழைப்புகளை நம்பி யாரும் வங்கி கணக்கு உள்பட எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம்.கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து இணையதளத்தில் தேடும்போது, பிரபல மருத்துவமனைகளின் பெயர்களில் போலி 'வெப்சைட்டுகள்' வருகின்றன. இதன்மூலமும் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments