பழைய கார்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து!! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

 -MMH

கோவை ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில், மார்ட்டின் என்பவருக்கு சொந்தமான, பழைய கார்களை உடைத்து அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தில், இன்று மதியம் ஒரு மணி அளவில், காரை உடைக்கும் பொழுது ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென பரவி, நிலையத்திலிருந்த கார்கள், கார் சீட்டுகள், ஆயில்கள் மற்றும் உதிரி பொருட்களில் பற்றி எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வேகமாக வந்த தீயணைப்பு படை வீரர்கள்,  விரைந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில், பல லட்சம் மதிப்பிலான உடைந்த கார்களின் உதிரிபாக பொருட்கள் எரிந்து நாசமாகியது. 

இதுகுறித்து புலியகுளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments