தனியார் அமைப்பு மூலம் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த முடீஸ் பகுதி மக்கள்! !

 

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் முடீஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச் வளாகத்தில் நேற்றைய தினம் டி. எஸ். குரூப், சென்னை, என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார்கள்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, பல், பொதுநலம், எலும்பு முறிவு, மூட்டு வலி, சர்க்கரை, போன்ற நோய்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அதற்கான தீர்வுகளுக்கு பரிந்துரை செய்தனர்.

இந்த மருத்துவ முகாமில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் அப்பகுதி மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-செந்தில்குமார் (முடீஸ்) , S.ராஜேந்திரன் .

Comments